Friday, June 27, 2008

JUNE 27, 2008


“பாத்தீங்களா...! நாம மட்டும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுறதாலே, எதிர்கட்சிகளுக்கு வேலையே இல்லாம போச்சு! அந்த அம்மா என்னடான்னா கோடநாடு எஸ்டேட்லேயும், எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் அமெரிக்காவிலேயும் நிம்மதியா ‘ரெஸ்ட்’ எடுக்கறாங்க! இதெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கல தலைவரே...!”

Thursday, June 26, 2008

JUNE 26, 2008


“இந்த பக்கம் ஒரு பெட்ரோல் பங்குல ‘சாதா’ பெட்ரோல் போடுறாங்களாம்... அது எங்க சார் இருக்கு...!”

JUNE 25, 2008


“குடிமகன்கள் ‘ராவா’ குடிச்சி உடம்பு கெட்டுடக் கூடாதுங்கற நல்ல எண்ணத்திலதான் ‘சரக்கு’ல தண்ணி கலந்து வித்தோம்... அது தப்பா சார்...!”

Tuesday, June 24, 2008

JUNE 24, 2008


“அதான் ஒரே குழப்பமா இருக்குய்யா...! வட்டச் செயலாளரான எனக்குத் தெரியாம, அம்மா எப்போ ‘ஜி.எச்’சுக்கு வந்தாங்க? ஒரு வேள மாறுவேஷத்துல வந்து இருப்பாங்களோ...!”

JUNE 23, 2008


“இதோ பாருங்க! பாகவதர் காலத்து படத்துலருந்து தசாவதாரம் படம் வரைக்கும் எல்லா சி.டி.யும் இருக்கு... ஆனா நீங்க கேட்கற ‘காடு வெட்டி குரு’ சி.டி.யெல்லாம் நம்மகிட்ட கிடையாது சார்...!”

JUNE 22, 2008

“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. காலைல 6 மணிக்கு போட்ட டி.வி.யை நைட்டு 10 மணிக் குத்தான் ‘ஆப்’ பண்ணப்போறான்... இந்த கேபிள் டி.வி.யால தான் படிப்பே பாழாப் போகுது! இதுல ஜூலை 15 ‘கல்வி வளர்ச்சி தினத்தன்னிக்கி’ அரசு கேபிள் டி.வி.யை தொடங்கப் போறாங்களாம்! நல்ல கூத்துத்தான்...! ”

JUNE 21, 2008


“நீ எப்படி எல்ல நாட்டு ‘ஸ்டாம்பு’களையும் சேகரிச்சி வைச்சிருக்கியோ, அதுபோல இவங்க எல்லா நாட்டு ‘வெடிகுண்டு, ஏவுகணை’யெல்லாம் சேகரிச்சி வைச்சிருக்காங்க...!”

Friday, June 20, 2008

JUNE 20, 2008


“எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான் சாமி...!”

JUNE 19, 2008


Tuesday, June 17, 2008

JUNE 17, 2008


“முதல்ல கூட்டணி கிடையாதுன்னார்... அப்புறம் தொண்டர்கள் என்ன முடிவோ அதுவே என் முடிவுன்னார்... பிறகு தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யும் கட்சியுடன் கூட்டணின்னார்...! இப்போ ஒரே போடா! நான்தான் அடுத்த முதல்வர், கூட்டணி கிடையாதுன்னு சொல்றார்... எனக்கென்னவோ, தலைவர் வெயில்ல அதிகம் சுத்தி ஒரு மாதிரி ஆயிட்டாருன்னு நெனைக்கிறேன்...!”

Monday, June 16, 2008

JUNE 16, 2008


“சீக்கிரம் பெட்ரோலை போடுய்யா... விலை மறுபடியும் ஏறிடப்போகுது...!”

Saturday, June 14, 2008

JUNE 14, 2008


என்னது...! காலைலேர்ந்து சுயேச்சை அமைச்சர் வீட்ல தண்ணீர் வர்லையா? தோ... நானே நேர்ல வர்றேன்...!

JUNE 13, 2008


“நடக்கப்போற தி.மு.க. மாநாடுக்கு ஸ்டாலின் வருவாரா? ம.தி.மு.க. மாநாட்டுக்கு ஜெயலலிதா வருவாங்களான்னு இவங்க ரெண்டுபேரும் ரோட்ல பந்தயம் கட்டி விளையாட்றாங்க சார்...!”

Thursday, June 12, 2008

JUNE 12, 2008


“சற்றுமுன் கிடைத்த தகவல்படி, நமது மாவட்ட தலைவர் மாற்றப்பட்டுள்ளதால், நாங்கள் அணிவித்த மாலையைத் தயவு செய்து திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்...!”

JUNE 11, 2008


“அதான் எனக்கும் புரியலை... தலைவரு, ‘நாடாளும் கட்சி’ன்னு பேர் வச்சிருக்கார்! ஆனா ‘எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை’ன்னுÓ சொல்றார்! ஒரு வேல ‘பிரதமர்’ பதவிக்கு ஆசைப்படுறாரோ என்னவோ...!”

Tuesday, June 10, 2008

JUNE 10, 2008


“கண்ட இடத்தில குப்பையை கொட்டக் கூடாதுன்னு தெரியும்ல, எடு நூறு ரூபாயை...!''

Monday, June 9, 2008

JUNE 09, 2008


“தனியார் பொறியியல் கல்லூரிகள் எதுவும் நன்கொடை வாங்கலேன்னு போன வருஷம் சொன்ன அமைச்சர் இந்த வருஷம் சில கல்லூரிகள் வாங்கியிருக்குனு சொல்றாரு... அப்ப அடுத்த வருஷம் அது எல்லாம் பல்கலைகழகமா மாறலாம், சார்! என்ன சொல்றீங்க...?!”

Saturday, June 7, 2008

JUNE 07, 2008



“நம்ம நிதி அமைச்சர் ‘10 சதவீதத்துக்கு கொண்டு வருவேன்...’ன்னு அடிக்கடி சொன்னதெல்லாம் பணவீக்கத்தைதான் சார்...! நாமதான், பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதத்துக்கு கொண்டு வருவார்னு தப்பா புரிஞ்சிக்கிட்டோம்...!”

Friday, June 6, 2008

JUNE 05, 2008




“உலக சுற்றுச்சூழல் நாளையட்டி, பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி, ‘கார்-பைக்’ எல்லாம் எடுக்காம நம்மள ஆபீசுக்கு நடக்க வச்சி, இந்தியா மாசுபடுவதை நம்ம பிரதமர் எப்படி தடுக்குறாரு பாத்தீங்களா...!”

JUNE 06, 2008